இதனிடையே ஜேம்ஸ் பிரையன்ட் ஆபத்தான நபர் எனவும் பொதுமக்கள் அவரை அணுக வேண்டாம் எனவும் போலீசார் எச்சரிக்கை விடுத்தனர். மேலும் உள்ளூர் ஊடகங்களில் அவரை தேடப்படும் குற்றவாளி என கூறி செய்திகள் வெளிவந்தன. இதனால் ஜேம்ஸ் பிரையன்ட் போலீசில் சரணடைய முடிவு செய்தார். வக்கீல் ஒருவரின் உதவியோடு அமைதியான முறையில் போலீசில் சரணடைவதற்கான ஏற்பாடுகளை செய்தார்.
இதையடுத்து தான் தங்கியிருந்த வனப்பகுதியிலிருந்து போலீஸ் நிலையம் செல்வதற்கு தனது சொந்த செலவில் ஹெலிகாப்டர் ஒன்றை வாடகைக்கு அமர்த்தினார். அந்த ஹெலிகாப்டரில் அவர் போலீஸ் நிலையம் வந்து இறங்கினார். அப்போது பத்திரிகையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு தலைமறைவாக இருந்தது குறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் ‘‘அந்த அனுபவம் நன்றாக இருந்தது. தினமும் யோகா செய்தேன்’’ என கூறினார். பின்னர் அவர் போலீஸ் நிலையத்துக்கு சென்று போலீசாரிடம் சரண் அடைந்தார்.