சீனாவின் மத்திய மாகாணமான ஹெனானில் கடந்த சில நாட்களாக பெய்த பலத்த மழையினால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 25 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்களில் 12 பேர் ஹெனான் மாகாண தலைநகரான ஜெங்ஜோவில் வெள்ளத்தில் மூழ்கிய சுரங்கப்பாதையில் சிக்கிய 12 பேர் ஆவர்.
ஹெனான் மாகாணத்தில் சுரங்கங்களில் இருந்து 500 க்கும் மேற்பட்டோர் இறுதியில் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதன்கிழமை இரவு வரையான நிலவரப்படி அனர்த்தங்களினால் ஏழு பேர் காணாமல்போயுள்ளதுடன், 160,000 பேர் தங்களது சொந்த இடங்களை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாகவும், 1.24 மில்லியன் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சீனாவின் குளோபல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
அதேநேரம் ஒரு நாளைக்கு 600 க்கும் மேற்பட்ட ரயில்களைக் காணும் ஜெங்ஜோ கிழக்கு ரயில் நிலையம் முடங்கியது. வணிக நிலையங்கள் வீடுகள், வாகனங்கள் பாலங்களும் வெள்ளத்தில் மூழ்கியுள்ன.
பல அணைகள் மற்றும் நீர்த்தேக்கங்கள் எச்சரிக்கை அளவை மீறியுள்ளன, மேலும் கரைகளை கடந்து நகரங்களுக்குள் புகுந்துள்ள ஆற்று வெள்ளங்களை திசை திருப்புவதற்கு வீரர்கள் அணி திரட்டப்பட்டுள்ளனர்.
ஹெனனின் பல பகுதிகளில் விமானங்கள் மற்றும் ரயில்களும் நிறுத்தப்பட்டுள்ளன.