ஹூசெய்ன் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த போது இரகசியமாக 700 முறைப்பாடுகள்!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் ஆணையாளர் சயிட் அல் ஹூசெய்ன் வடக்கிற்கு விஜயம் செய்திருந்த போது, இரகசியமான முறையில் 700 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கில் இயங்கி வரும் அரச சார்பற்ற நிறுவனங்களினால் இவ்வாறு இரகசியமான முறையில் 700 முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டமை குறித்து புலனாய்வுப் பிரிவினரோ அரசாங்கமோ அறிந்திருக்கவில்லை என கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
மனித உரிமைப் பேரவையின் அணையாளர் அல் ஹூசெய்ன் யாழ்ப்பாணம் விஜயம் செய்திருந்த போது அரச சார்பற்ற நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள் இரகசியமாக சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர்.