தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளிலும் பரவலாக நடித்து வரும் ரகுல்பிரீத் சிங், தனது சகோதரர் அமன் பிரீத்தை தெலுங்கு சினிமாவில் நாயகனாக அறிமுகம் செய்துள்ளார். பி.ராஜசேகர் என்பவர் இயக்கியுள்ள அந்த படத்தில் மோனிகா சர்மா நாயகியாக நடித்திருக்கிறார்.
லவ் ஆக்சன் கதையில் உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இந்நிலையில், தெலுங்கு நடிகரான நாகார்ஜூனா, நின்னே பெல்ல தாதா என்ற அமன் பிரீத்தின் பட தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளார்.
1996ல் கிருஷ்ணவம்சி இயக்கத்தில் நாகார்ஜூனா நடித்த சூப்பர் ஹிட் படத்தின் தலைப்பு இதுவாகும். தபு இந்த படத்தில் நாயகியாக நடித்திருந்தார். தற்போது அதே டைட்டீலில் ரகுல் பிரீத் சிங்கின் சகோதரர் அமன் பிரீத்தும் நடித்து வருகிறார். ரகுல் பிரீத் சிங் கேட்டுக்கொண்டதற்கிணங்க, அந்த தலைப்பை விட்டுக்கொடுத்துள்ளார் நாகார்ஜூனா.