ஹலோவின் எச்சரிக்கை! லெகோ-வடிவ THCஇனிப்புகள் கைப்பற்றப்பட்டன
கனடா-கணிசமான அளவு மரியுவானா மற்றும் கஞ்சாவை கொண்ட ஒரு படிக கலவை THC தயாரிப்புக்கள்-கஞ்சாவை முக்கிய செயல்படும் பொருளாக கொண்டு தயாரிக்கப்பட்ட இனிப்பு வகைகள் உட்பட்டவை லெகோ வடிவங்களிற்குள் வைக்கப்பட்டு போக்கு வரத்து நிறுத்தம் ஒன்றில் வைத்து கல்கரிக்கு வெளியே பிக்அப் டிரக்கிலிருந்து கைப்பற்றப் பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ஒருவர் கைது செய்யப்பட்டார்.
இப் பறிமுதலில்
1.3கிலோ கிராம் மரியுவானா.
27 THC ஊசிகள்.
14 நொருங்ககூடிய பொட்டலங்கள்.
204, THC இனிப்புக்கள்- லெகோ வடிவ உருவத்திற்குள்.
5 செல் போன்கள்.
போன்றனவும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டன.
இச்சம்பவத்தை தொடர்ந்து கல்கரி Tsuut’ina பகுதி பொலிசார் ஹலோவின் காலங்களில் அவதானமாக இருக்குமாறு பெற்றோரை எச்சரிக்கின்றனர்.பிரகாசமான நிறங்கள், பல சுவைகள் மற்றும் பொம்மை போன்ற THC இனிப்புகளின் கலவைகளில் முக்கிய அக்கறை வேண்டும் என அறிவுறுத்தப்படுகின்றது.
சந்தேப்படும்படியான இனிப்புக்களை கண்டால் பொலிசாருடன் தொடர்பு கொள்ளுமாறு ஆர்சிஎம்பியினர் கேட்டுக்கொள்கின்றனர்.
Tsuut’ina பிரதேசம் கல்கரியின் தென்மேற்கில் அமைந்துள்ளது.