ஹட்டன் மல்லியப்பு சந்தியிலுள்ள உணவகம் ஒன்றில் எரிவாயுக் கசிவினால் வெடிப்புச் சம்பவம் ஒன்று இன்று காலை 8.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
குறித்த வெடிப்பு சம்பவத்தினால் உணவகத்துக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் இது தொடர்பிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் ஹற்றன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாம் சில காலமாக உணவகத்தை நடத்தி வருவதாகவும், இன்று காலை உணவை சமைத்துக் கொண்டிருந்த போது எரிவாயு சிலிண்டர் மற்றும் எரிவாயு அடுப்புக்கு இடையில் இருந்த எரிவாயுக் குழாய் திடீரென வெடித்து தீப்பிடித்ததாகவும் வர்த்தகர் தெரிவித்தார்.
கடந்த சில நாட்களாக நாட்டில் பல எரிவாயு சிலிண்டர் வெடிப்புச் சம்பவங்கள் பதிவாகி வருகின்றமை தெரிந்ததே.