காசாவில் நடவடிக்கைகள் முடிவடைந்த பின்னர் சர்வதேச அளவில் ஹமாஸ் தலைவர்களை கொலை செய்வதற்கு இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.
காசாவிற்கு வெளியே கத்தார் துருக்கி லெபனானில் வசிக்கின்ற ஹமாஸ் அமைப்பின் சிரேஸ்ட தலைவர்களை படுகொலை செய்வதற்கான அனுமதியை இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு உத்தரவிட்டுள்ளார்
அமெரிக்காவின் வோல்ஸ்ரீட் ஜேர்னல் இதனை தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பல வருடங்களாக ஹமாஸின் முக்கிய தலைவர்களை கொலை செய்து வருகின்றது அதனை மேலும் விரிவுபடுத்தவுள்ளது.
கத்தார் ரஸ்யா துருக்கி ஈரான் போன்ற நாடுகள் ஹமாஸ் தலைவர்களுக்கு அடைக்கலம் வழங்கியுள்ளன,
கடந்த காலங்களில் பெய்ரூட் லெபானில் இஸ்ரேல் பலரை கொலை செய்திருந்தது.
ஹமாசின் தலைவர்கள் எங்கிருந்தாலும் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடு;க்குமாறு 22 ம் திகதி இஸ்ரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார்.
அன்றைய தினம் இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் யோவ் கலன்ட் ஹமாஸ் தலைவர்கள் நீண்டகாலம் உயிர்வாழப்போவதில்லை என்ற அடிப்படையில் கருத்து தெரிவித்திருந்தார்.
அவர்கள் மரணத்திற்காக குறிக்கப்பட்டுள்ளனர் அவர்களுக்கு எதிரான போராட்டம் உலகளாவியது காசாவில் உள்ளவர்களுக்கும் விமானங்களில் பயணிக்கும் பயங்கரவாதிகளுக்கும் எதிரானது எனவும் அவர் குறிப்பிட்டார்
ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலிற்கு பின்னர் சில இஸ்ரேலிய அதிகாரிகள் ஹமாஸ் தலைவர் காலித் மெசாலையும் வெளிநாட்டில் வசிக்கின்ற தலைவர்களையும் கொலை செய்வதற்கான உடனடி அனுமதியை கோரினார்கள் என விடயங்களை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும் துருக்கி கத்தாரில் அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தால் அது பணயக்கைதிகளை விடுவிப்பதற்கான இராஜதந்திர முயற்சிகளை பாதித்திருக்கும்.
இதேவேளை இஸ்ரேலின் இந்த திட்டம் பிழையான ஆலோசனைகளை அடிப்படையாக கொண்டது என இஸ்ரேலின் மொசாட்டின் முன்னாள் தலைவர் எவ்ரெய்ம் ஹலேவி தெரிவித்துள்ளார்.
ஹமாசை சர்வதேச அளவில் தேடிக்கண்டுபிடித்து அதன் தலைவர்கள் அனைவரையும் அழிக்க முயல்வது பழிவாங்கும் நோக்கத்தை அடிப்படையாக கொண்டது மூலோபாய நோக்கங்களை அடிப்படையாக கொண்டது இல்லை நம்பமுடியாதது என அவர் தெரிவித்துள்ளார்.