ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி எதிர்வரும் உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தனியாக போட்டியிடவுள்ளதாகவும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் சேர்ந்து அன்னம் சின்னத்தில் போட்டியிடுவதற்கு எந்தவொரு எதிர்பார்ப்பும் இல்லையெனவும் அக்கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீ ல.சு.க. “கை” சின்னத்தில் போட்டியிடவுள்ளதாகவும் கூறியுள்ளார்.
தமது கட்சியுடன் கூட்டணி சேரவுள்ள சிறு கட்சிகளின் வேண்டுகோளுக்கிணங்க சின்னம் குறித்த தீர்மானத்தில் மாற்றம் கொண்டுவர இடமுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
ஐ.தே.க. மற்றும் ஸ்ரீ ல.சு.க. என்பன தனித்தே போட்டியிடுவது உறுதி எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.