2015 ஆம் ஆண்டு அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீடிப்பது தொடர்பாக ஆராயும் குழு அறிக்கையை தயாரித்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி, தேசிய அரசாங்கத்தில் நீடிப்பதா? இல்லையா, என்பது குறித்து ஆராய்வதற்கு அமைச்ச சரத் அமுனுகமவின் தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தக் குழுவின் அறிக்கை எதிர்வரும் 24 ஆம் திகதிக்கு பின்னர், ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
குறித்த அறிக்கையில், எதிர்வரும் 18 மாதங்களுக்கு அரசாங்கம் முன்னெடுக்க வேண்டிய பரிந்துரைகள் பலவும் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.