அடுத்து வரவிருக்கும் மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, கட்சியின் தேசிய அமைப்பாளர் உள்ளிட்ட தொகுதி அமைப்பாளர்களை மாற்றம் செய்து கட்சியை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்வதற்கான மானசீக பலத்தை ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதன் பிரகாரம், கட்சியினுள் தீர்மானங்களை எடுப்பதற்கான அதிக அதிகாரத்தை இளம் தலைவர்களுக்கு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் இருந்து கொண்டு வேறு ஒர் அரசியல் கட்சியின் வெற்றிக்கு உழைக்கும் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசிய கட்சியில் இந்த மாத இறுதியில் மாற்றம் இடம்பெறவுள்ள நிலையில், சுதந்திர கட்சியினரும் மாற்றத்தை கொண்டுவர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.