ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மேலும் சில தொகுதி மற்றும் மாவட்ட அமைப்பாளர் நியமனம் இன்று (16) முற்பகல் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றது.
அந்தவகையில் எம்.எஸ்.எம் சகாவுல்லாஹ் நீர்கொழும்பு தொகுதி இணை அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர்களாக டீ.ஆர். இந்து குணதிலக, எம். நிஹால் விஜயானந்த, ஜீ.கே. உபாலி சந்திரசேன ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். ஷத்ரிய ராஜபுத்ர வீரசிங்க மற்றும் மஹிந்த பண்டார பக்மீவௌ ஆகியோர் குருணாகல் மாவட்ட அமைப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மாத்தறை மாவட்ட அமைப்பாளராக சந்திரநாத் வீரமனும் திகாமடுல்லை மாவட்ட அமைப்பாளராக வை.ஜீ. பந்துல சரத் குமாரவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இதே நேரம் மஹா ஓயா பிரதேச சபையின் ஐக்கிய தேசியக் கட்சி முன்னாள் உப தலைவர் கே.டீ. சேனாரத்ன மற்றும் மஹா ஓயா ஐக்கிய தேசியக் கட்சி இளைஞர் அமைப்பின் செயற்பாட்டாளரான ஆர்.எம்.சீ.எம். ஞானரத்ன ஆகியோர் இன்று (16) முற்பகல் ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் வைத்து ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்து ஜனாதிபதிக்கு தமது ஆதரவினை தெரிவித்தனர்.
அமைச்சர் ஜோன் செனவிரத்ன மற்றும் வட மேல் மாகாண முதலமைச்சர் தர்மசிறி தசநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.