ஸ்ரீலங்கா அரசுக்கு எதிராக லண்டனில் உள்ள இலங்கை தூதரகம் முன்பாக போராட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் 65 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைக்கப்பட்டிருக்கும் IUSF மாணவர் தலைவர்களான வசந்த முதலிகே மற்றும் சிறிதம்ம ஹிமி ஆகியோரை உடனடியாக விடுதலை செய், போராட்டக்காரர்கள் மீதான அனைத்து தாக்குதல்களையும் நிறுத்து, போராட்டக்காரர்கள் மீதான அனைத்து குற்றச்சாட்டுகளையும் கைவிடு, PTA மற்றும் பிற அடக்குமுறை சட்டங்களை ரத்துச் செய்.
ஒன்று கூடும் சுதந்திரம், பேச்சு சுதந்திரம் மற்றும் அரசோடு மாறுபட்ட நிலைப்பாட்டுக்கான சுதந்திரம் ஆகிய அடிப்படை உரிமைகளை உத்தரவாதப்படுத்து முதலிய கோரிக்கைகளை முன்வைத்தே இப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இலங்கையில் உள்ள மக்கள் பேரவைகளுக்கான இயக்கம் (MPC) மாணவர் சங்கமான IUSF உடன் இணைந்து, இலங்கையில் நடைபெறும் போராட்டத்திற்கு, சர்வதேச அளவில் அனைத்து தொழிலாளர்கள், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஆதரவு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பு மாலை 4 மணிக்கு இப் போராட்டம் இடம்பெறவுள்ளதாகவும் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
