ரஷ்யாவின் ஸ்புட்னிக் – வி கொவிட்-19 தடுப்பூசியின் 50,000 டோஸ்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்துள்ளன.
இந்த தடுப்பூசி பங்குகள், ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள ரஷ்ய கமலியா மருத்துவ நிலையத்தில் இருந்து துபாய்க்கு கொண்டு வரப்பட்டு, எமிரேட்ஸ் சரக்கு விமானத்தின் மூலமாக அதிகாலை 12.35 மணியளவில் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தடுப்பூசிகளின் பங்குகள் பின்னர் இறக்குமதி செய்யப்பட்டு, சிறப்பு குளிரூட்டப்பட்ட லொறிகள் மூலமாக கொழும்பில் உள்ள அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் சேமிப்பு வளாகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.