ஸ்டீபன் ஹாக்கிங்கின் புதிய ஆய்வுநிலையம்
உலகின் மிக முக்கியமான கோட்பாட்டு இயற்பியலாளர்களில் ஒருவரும் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக பேராசிரியருமான ஸ்டீபன் ஹாக்கிங் “Leverhulme” என்ற எதிர்கால செயற்கை அறிவாற்றல் நிலையத்தை செயற்கை அறிவாற்றலின் பல்வேறு வகையான பயன்பாடு குறித்து ஆய்வு நடத்துவதற்காக துவங்கியுள்ளார்.
அதிகமான திறன் கொண்ட கைபேசிகள் முதல் , இயந்திரமனித அறுவை சிகிச்சை நடாத்துதல், டெர்மினேட்டர் பாணியிலான ராணுவ மனித இயந்திரங்கள் என பலவரான ஆய்வுகள் இங்கு நடாத்தபடவுள்ளதாம்.
“Leverhulme”லிவர்கோல்ம் என்ற அறக்கட்டளையின் 12.3 மில்லியன் டாலர் மானியத்துடன் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த நிலையம், மனிதகுலத்துக்கு நன்மையளிக்கும் விதமாக செயற்கை அறிவாற்றலை பயன்படுத்தும் வகைகள் குறித்து ஆய்வுசெய்யப்படும் என கூறப்படுகின்றது.