தமிழில் ராஜா ராணி, மெர்சல், தெறி, பிகில் படங்களை இயக்கிய அட்லீ, அடுத்ததாக பிரபல நடிகரை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் நடித்த ’மெர்சல்’, ‘தெறி’ மற்றும் பிகில் ஆகிய திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர் அட்லீ தற்போது ஷாருக்கான் நடித்துவரும் ’கிங்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இந்த படத்தை முடித்துவிட்டு அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் படத்தை அட்லீ இயக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அட்லீ சொன்ன கதை அல்லு அர்ஜுனுக்கு பிடித்து விட்டதால் அடுத்த படத்தை அவர் இயக்க சொன்னதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் சமீபத்தில் வெளியான ’புஷ்பா’ திரைப்படம் பான் இந்தியா திரைப்படமாக வெளியான நிலையில் அட்லீயுடன் இணையும் படமும் பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]