ஆரண்ய காண்டம் படத்தை இயக்கிய தியாகராஜன் குமாரராஜா, நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது இயக்கி வரும் படம் “சூப்பர் டீலக்ஸ்”. மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், சமந்தா, மிஷ்கின், ரம்யா கிருஷ்ணன், காயத்ரி, பகவதி பெருமாள் உள்பட பலர் நடிக்கிறார்கள்.
இந்தப்படத்தின் திரைக்கதையை தியாகராஜன் குமாரராஜாவுடன் இணைந்து நலன் குமாரசாமி, மிஷ்கின், நீலன் கே.சேகர் ஆகியோர் எழுதி உள்ளனர். யுவன் இசை அமைக்கிறார், பி.எஸ்.வினோத், நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்கள்.
இந்தப்படத்தில் விஜய் சேதுபதி திருநங்கையாக நடிக்க இருக்கிறார். இதை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருநங்கை வேடத்தில் இருக்கும் படம் வெளியானது. தற்போது, விஜய் சேதுபதி திருநங்கை வேடத்திற்கு தயாராகும் படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.