நிலுவை சம்பளத்துடன் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த தீர்மானம்
சட்டவிரோத கருத்தடை அறுவை சிகிச்சை செய்த குற்றச்சாட்டின் பேரில் கட்டாய விடுமுறையில் அனுப்பப்பட்ட குருணாகல் வைத்தியசாலையின் வைத்தியர் ஷாபி சிஹாப்தீனை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அவர் பணியில் இல்லாது விடுமுறையில் இருந்த காலத்துக்கான சம்பள நிலுவையையும் வழங்க சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
இன்று வெளியிடப்பட்ட சுகாதார அமைச்சின் ஊடக அறிக்கை ஒன்றின் ஊடாக இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]