நான்கு ஆப்பிள் சாப்பிட்டால் கிடைக்கும் நன்மையானது ஒரே ஒரு கொய்யாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும். தினமும் ஒன்று சாப்பிட்டு வந்தால், உடலில் நோய் எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து, நோய்களின் தாக்கத்தைக் குறைக்கலாம்.
தேவையானப் பொருட்கள் :
கொய்யாப்பழம் – 2
நாட்டு சர்க்கரை – சுவைக்கேற்ப
தேங்காய்ப்பால் – 1 கப்
உப்பு – 1 சிட்டிகை
தண்ணீர் – அரை கப்
ஐஸ்கட்டி – தேவையான அளவு
செய்முறை:
கொய்யாப்பழத்தை நன்றாக கழுவி சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.
மிக்சியில் கொய்யாபழத்தை போட்டு அதனுடன் அரை கப் தண்ணீர் ஊற்றி நன்றாக அரைக்கவும்.
அரைத்த ஜூஸை வடிகட்டி அதனுடன் தேங்காய்ப்பால், நாட்டு சர்க்கரை, உப்பு, ஐஸ்கட்டி சேர்த்து நன்றாக கலந்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி பரிமாறவும்.
சூப்பரான தேங்காய்ப்பால் கொய்யாப்பழ ஜூஸ் ரெடி.
இது குழங்தைகளுக்கு மிகவும் நல்லது. ஜீரண சக்தியை தூண்டும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]