பணிபுரியும் இடங்களில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகளை தவிர்க்கும் வகையில்,
புதிய இணையதளம்(வெப்சைட்) ஒன்றை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சகம் வெளிவிட்டுள்ளது..
இந்த இணையதளத்தின் பெயர் ஷீ-பாக்ஸ், அதாவது, பாலியல் புகார்களை தெரிவிக்கும் புகார் பெட்டி என்று பெயரிடப்பட்டுள்ளது.
பணிபுரியும் இடங்களில் பெண்கள் ஏற்படும் அதிகமான பாலியல் ரீதியான தொந்தரவுகளை கலையும் வண்ணம் இது உருவாக்கபட்டுள்ளது..
பாலியல் தொந்தரவு பற்றி மகளிர் மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா காந்தி கூறுகையில்,
பெண்கள் பணியிடங்களில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாவது பெருகிவிட்டது
நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள, இந்த இணையதளம் மூலம் பெண்கள் புகார்களைத் தெரிவித்தால், விரைவாக நாங்கள் அதற்குரியஆக்சன் எடுப்போம்.
முதல்கட்டமாக, மத்தியஅரசில் பணியாற்றும் பெண் ஊழியர்கள் அவர்களுக்கு நிகழும் பாலியல் புகார்களை தெரிவிக்கலாம்
சிறிது நாட்களில் இந்த சேவையை தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றும் பெண்களுக்கும் பயன்படும் வகையில் சிறிது மாற்றம் செய்யப்படும்
அதற்குசிறியஅளவிலான மாற்றங்கள் மட்டுமே இணையதளத்தில் செய்ய வேண்டியது இருக்கும்.
அதைசெய்துவிட்டால் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் பெண்களும் தங்களுக்கு ஏற்படும் பாலியல் பிரச்சனைகளை குறித்து புகார் அளிக்கலாம் என்று தெரிவித்தார்.