இன்று அதிகாலை வேர்செய் நகரில் (Versailles- Yvelines) பெரும் குற்றச்செயல் ஒன்று நடந்துள்ளது. குற்றச் செயல்களினால் ஏற்பட்ட தீவிபத்து பெரும் சேதங்களை ஏற்படுத்தி உள்ளது. இனந்தெரியாதவர்கள் மூலம் மூட்டப்பட்ட தீ, ஆறு சிற்றுந்துகளை முற்றாக எரித்துச் சாம்பலாக்கியதுடன், இருபதிற்கும் மேற்பட்ட சிற்றுந்துகளை உபயோகிக்க முடியாதபடி தேசமாக்கி உள்ளது.
இந்தச் சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில், 43 rue des Chantiers இல் ஆரம்பித்துள்ளது. பெருமளவான தீயணைப்புப் படைவீரர்கள் பல மணி நேரங்களாகப் போராடித் தீயை அணைத்துள்ளனர்.
பிறந்து 15 நாட்களேயான குழந்தை ஒன்று, இந்தப் புகைக்காற்றைச் சுவாசித்ததால் Chesnay வைத்தியசாலையின் அவசரசகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளது. 27 வயதுடையவர் ஒருவரும், மூச்சுத்திணறல் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குப்பைத் தொட்டியொன்றை சிற்றுந்தகளிற்கு நடுவில் இழுத்துவிட்டு, அதனைக் கொழுத்தி உள்ளனர் என, தீயணைப்புப் படை வீரர்கள் தெரிவித்துள்ளனர். காவற்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.