கொரோனா வைரஸின் ஒமிக்ரோன் மாறுபாடு டெல்டா மாறுபாட்டை விட வேகமாக பரவுகிறது என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தலைவர் திங்களன்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் இது ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்ட அல்லது கொவிட்-19 நோயிலிருந்து குணமடைந்தவர்களுக்கும் தொற்று நோயை ஏற்படுத்துகின்றது.
அதன்படி டெல்டா மாறுபாட்டை விட ஒமிக்ரோன் கணிசமாக வேகமாக பரவுகிறது என்பதற்கு இப்போது நிலையான சான்றுகள் உள்ளன என்றும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைவர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் குறிப்பிட்டார்.
இதேவேளை ஒமிக்ரோன் முந்தையதை தொற்றுகளை விட இலகுவான மாறுபாடு என்று ஆரம்ப ஆதாரங்களில் இருந்து முடிவு செய்வது “புத்திசாலித்தனமற்றது” என்று உலக சுகாதார ஸ்தாபனத்தின் தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் திங்களன்று சுட்டிக்காட்டியுள்ளார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]