வெள்ளை வான் கலாச்சாரத்திற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகிப்பதாக அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
வீடுகளிலேயே இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றுவதற்கு படையினர் வெள்ளை வான்களிலேயே செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் உரையாற்றும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,
கோட்டாபய ராஜபக்ஷ ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் வெள்ளை வான் கலாச்சாரம் தலைத்தூக்குமென கடந்த ஜனாதிபதித் தேர்தலில் போது பிரச்சாரம் செய்யப்பட்டது.
அதற்காக முதலைக்கண்ணீர் வடித்தனர். ஊடகவியலாளர் சந்திப்பில் படம் காட்டப்பட்டது. முன்னாள் சுகாதார அமைச்சரின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் பங்குபற்றிய இருவர் சிறையில் உள்ளனர்.
வெள்ளைவான் கலாச்சாரத்துக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவே தலைமை வகிக்கின்றார்.
கோவிட் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள முடியாமல் வீடுகளிலேயே இருக்கும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசியை ஏற்றுவதற்கு படையினர் வெள்ளை வான்களிலேயே செல்கின்றனர்.