வெள்ளை மாளிகையில் நடந்த கடைசி விருந்தோம்பல் நிகழ்ச்சி: பார்வையாளர்களை கிறங்கடித்த மிச்செல் ஒபாமா
அமெரிக்காவில் இன்னும் சில தினங்களில் ஜனாதிபதிக்கான தேர்தல் நடைபெற உள்ளது. இத்தேர்தலில் ஹிலாரி கிளிண்டனும், டிரம்பும் ஜனாதிபதிக்கான தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் ஜனாதிபதியாக உள்ள பராக் ஒபாமாவின் பதவிக்காலம் இன்னும் சில தினங்களில் முடிவடைய உள்ளதால், வெள்ளை மாளிகையில் அவருக்கான கடைசி விருந்தோம்பல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் அந்நாட்டைச் சேர்ந்த முக்கிய பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். சிறப்பு விருந்தினராக இத்தாலி நாட்டைச் சேர்ந்த ஜனாதிபதி மாட்டோரேன்சியும் அவரது மனைவியுமான அக்னீஸ்லேண்டினாவும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சிக்காக சிறப்பு ஏற்பாடுகள் வெள்ளை மாளிகையில் செய்யப்பட்டிருந்த நிலையில், சிவப்பு கம்பள வரவேற்புடன் ஜனாதிபதி பராக் ஒபாமாவும், மிச்செல் ஒபாமாவும் அழைத்து வரப்பட்டனர். அப்போது வாயிலில் முதலில் வந்த மிச்செல் ஒபாமாவின் உடையைக் கண்டு அனைவரும் ஆச்சரியத்தில் ஆழ்ந்தனர்.
இவரைப் பார்க்கையில் இரண்டு குழந்தைக்கு தாய் போல் இல்லை என்றும் பலர் கிசு கிசுத்துள்ளனர். அவர் அணிந்திருந்த உடை இத்தாலியின் பிரபல நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டது எனவும் கூறப்படுகிறது. அதன் பின்னர் ஆடல், பாடல் என வெள்ளை மாளிகையே களை கட்டியது.
இந்நிகழ்ச்சியில் மிச்செல் ஒபாமாவை இத்தாலி ஜனாதிபதி தன்னுடைய கையை அவரின் இடைபகுதியில் பிடித்து அழைத்துச் சென்ற சம்பவமும் பெரிதாக பேசப்பட்டது.
மேலும் மிச்செல் ஒபாமா அணிந்திருந்த உடையின் மதிப்பானது சுமார் 12,000 டொலர் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது.