வெள்ளை கொடியுடன் காணப்பட்ட பணயக்கைதிகளையே இஸ்ரேலிய படையினர் சுட்டுக்கொன்றனர் என தகவல் வெளியாகியுள்ளது.
காசாவில் மேற்கொண்ட இராணுவநடவடிக்கையின் போது ஹமாசிடம் பணயக்கைதிகளாகயிருந்த மூவரை தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
யொட்டாம் ஹைம் சமெர் தலக்கா அலோன் சர்மிஸ் என்ற மூன்று பணயக்கைதிகளையே தவறுதலாக சுட்டுக்கொன்றுள்ளதாக இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
காசாவின் வடபகுதியில் நடவடிக்கையில் ஈடுபட்ட இஸ்ரேலிய படையினரால் இவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.
இஸ்ரேலிய படையினரின் ஆரம்பகட்ட விசாரணைகள் மூன்று பணயக்கைதிகளும் ஒரு கட்டடிடத்திலிருந்து சேர்ட் இல்லாமல் வெளியே வந்தனர் ஒருவரின் கையில் தடியுடன் வெள்ளை கொடி காணப்பட்டது என்ற விபரம் தெரியவந்துள்ளதாக பெயர் குறிப்பிடவிரும்பாத இஸ்ரேலிய அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
அவர்கள் பத்து மீற்றர் இடைவெளியில் காணப்பட்டதால் படைவீரர் ஒருவர் அச்சமடைந்தார் அவர்கள் பயங்கரவாதிகள் என அறிவித்து துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டார் இருவர் உடனடியாக கொல்லப்பட்டனர் காயமடைந்த மற்றைய நபர் கட்டிடத்திற்குள் ஓடினார் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்
கட்டிடத்தின் உள்ளேயிருந்து ஹ{ப்ருமொழியில் கூக்;குரல் கேட்டது அந்த பிரிவி;ற்கான தளபதி உடனடியாக யுத்த நிறுத்தத்தை அறிவித்தார் எனினும் காயமடைந்த மூன்றாவது நபர்வெளியே வந்ததும் உடனடியாக சுடப்பட்டார் என இஸ்ரேலிய அதிகாரி தெரிவித்துள்ளார்.
பணயக்கைதிகளை ஹமாஸ் கைவிட்டிருக்கவேண்டும் அல்லது ஹமாஸ் உறுப்பினர்கள் தப்பியோடியிருக்கவேண்டும் என தகவல் வெளியாகியுள்ளது.
இதேவேளை இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இஸ்ரேலில் நூற்றுக்கணக்கான மக்கள் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்
டெல்அவியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான மக்கள் அவர்கள் தாயகம் கொண்டுவாருங்கள் என கோசமிட்டுள்ளனர்.
எங்களுடைய பெரும் அச்சம் நிஜமாகியுள்ளது உயிருடன் இருந்த பணயக்கைதிகள் உயிரிழந்துள்ளனர் என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டஒருவர்தெரிவித்துள்ளார்.
எங்களிற்கு உடல்களோ உடற்பைகளோ தேவையில்லை அனைத்து பணயக்கைதிகளும் விடுதலையாகும் வரை யுத்தநிறுத்தமே அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.