வெள்ளத்தில் மிதக்கும் பிரான்ஸ்
பிரான்ஸ் மற்றும் ஜேர்மனியில் ஏற்பட்டுள்ள வெள்ளத்துக்கு நேற்று மட்டும் நான்கு பேர் பலியாகியுள்ளனர்.
பிரான்சில் பெய்து வரும் கனமழையால் பெரும்பாலான நகரங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.
முக்கிய நதியான Seine வேகமாக நிரம்பி வருவதால் பதட்டம் அதிகரித்துள்ளது.
போக்குவரத்து முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளதால் சிறு படகுகள் மூலமே மக்கள் வெளியேற்றப்படுகின்றனர்.
பாரிசில் வெள்ள நீரின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்வதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரயில் நிலையங்கள் மூடப்பட்டுள்ளது.
இதுகுறித்து நபர் ஒருவர் கூறுகையில், நாங்கள் பல ஆண்டுகளாக இங்கு வசித்து வருகிறோம், இப்படி ஒரு வெள்ளத்தை இதுவரையிலும் பார்த்ததே இல்லை என தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரங்களை பிரான்ஸ் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹெலிகொப்டரில் சென்று பார்வையிட்டுள்ளார்.
Seine நதியின் நீர்மட்டம் உயர்ந்து கொண்டே செல்வதால் இயற்கை சீற்றங்கள் தொடரும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.