கேரளாவில் வெள்ளத்தின் போது திரையுலகை சேர்ந்த பலரும் தாங்கள் ஒரு பிரபலம் என்பதை மறந்து நிவாரண பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர். வளர்ந்துவரும் இளம் நடிகர் டொவினோ தாமஸும் வெள்ளத்தால் வீடிழந்த பலரையும் தனது வீட்டில் தங்கவைத்து உதவி செய்ததுடன் நிவாரண பணிகளிலும் ஈடுபட்டார்..
பலரும் இவரை பாராட்டி வரும் வேளையில், ஒரு சிலர் இவர் தனது படங்களின் பப்ளிசிட்டிக்காக இப்படி ஸ்டண்ட் அடிக்கிறார் என விமர்சித்து வருகிறார்கள்..
இதை கேள்விப்பட்டு நொந்துபோன டொவினோ தாமஸ், “வெள்ளத்தால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கும் நேரத்தில் பப்ளிசிட்டி தேடும் அளவுக்கு நடிகர்களாகிய நாங்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அதானால் எல்லாம் ரசிகர்கள் எங்கள் படங்களை பார்த்து ஓட வைக்கவும் மாட்டார்கள். நானும் சக மனிதன், மனித நேயம் கொண்டவன் என்கிற அடிப்படையில் தான் உதவிகள் செய்தேன். தயவு செய்து அதை கொச்சைப் படுத்தாதீர்கள்” என தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.