வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் ஆவணங்களில் திருத்தங்கள் மேற்கொள்ளும் போது தேவைப்படும் சட்ட ஆலோசனைகள் மற்றும் சேவைகளை இலவசமாக வழங்குவதற்கு இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது.
அதன்படி சட்ட ஆலோசனைகள் தேவைப்படும் நபர்கள் 0777235363 அல்லது 0113123872 என்ற இலக்கங்களை தொடர்புகொள்ளுமாறு இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் யு.ஆர்.த.சில்வா தெரிவித்துள்ளார்.