வெளியானது ரொனால்டோவின் ரகசியம்
பொதுவாக பிரபலங்கள் அனைவரும் தங்களுக்கென்று தனி முத்திரை வேண்டும் என்பதற்காக சில விஷயங்கள் செய்வார்கள்.
அதிலும் முக்கியமாக சினிமாத்துறையைச் சேர்ந்த பிரபலங்கள் மற்றும் விளையாட்டுத்துறையைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் தங்கள் உடல்களில் பச்சை குத்திக்கொள்வார்கள்.
உதாரணமாக இந்திய கிரிக்கெட் வீரர் கோஹ்லி, அவுஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் ஜான்சன், மேற்கிந்திய அணியைச் சேர்ந்த கிறிஸ் கெய்ல், இங்கிலாந்தைச் சேர்ந்த பென் ஸ்டேக்ஸ் என பலரும் தங்கள் உடல்களில் பச்சை குத்திக் கொண்டுள்ளனர்.
பச்சை குத்திக்கொள்வது கிரிக்கெட் வீரர்களுக்கு மட்டும் பிடித்தது அல்ல, கால்பந்து வீரர்களுக்கு அது தான் அடையாளமே. இதில் மிகவும் பிரபலமானவர் தான் டேவிட் பெக்காம். இவர் தன் உடம்பில் பல்வேறு விதமாக பச்சை குத்திக் கொள்வார், இதுக்கென்றே அவருக்கு தனி ரசிகர் பட்டாளம் உண்டு.
ஆனால் இவர்கள் எல்லாம் இப்படி இருக்கும் போது, இவர்களிடமிருந்து சற்றும் மாறுபட்டவர் தான் போர்ச்சுகல் நாட்டை சேர்ந்த கால்பந்து ஜாம்பவான் கிறிஸ்டியேன் ரொனால்டோ.
கிறிஸ்டியேன் ரொனால்டோவுக்கு பொதுவாக குழந்தைகள் என்றால் மிகவும் பிடிக்கும். நோயினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ரொனால்டோ உதவி செய்வார்.
அது மட்டுமில்லாமல் தன்னால் இயன்ற அளவிற்கு இரத்ததானம் செய்வார். பொதுவாக உடம்பில் பச்சை குத்திக் கொண்டவர்கள் ரத்த தானம் செய்ய மாட்டார்கள். அதையும் மீறி அவர்கள் செய்தால் அது அவர்களுக்கு மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.
இதன் காரணமாகவே ரொனால்டோ தன் உடம்பில் பச்சை குத்தவில்லையாம்.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்