கொழும்பு ராஜகிரியவில் இரு மாடிகளைக் கொண்ட வீடொன்றைச் சுற்றிவளைத்து, நாலரைக் கோடி ரூபா பெறுமதியான மதுபானப் போத்தல்களைச் சிறப்பு அதிரடிப் படையினர் கைப்பற்றினர். சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்தனர்.
பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவலுக்கு அமைய சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சட்ட விரோத விற்பனைக்காக பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 ஆயிரத்து 613 வெளிநாட்டு மதுபானப் போத்தல்களுடன் 46 வயதான சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வெளிநாட்டு மதுபான போத்தல் கொள்வனவு செய்யும் சாட்டில் பொலிஸ் உத்தியோகத்தர் அனுப்பட்டுள்ளார். சிவில் உடையில் சென்ற அவருக்கு வெளிநாட்டு மதுபான போத்தல் விற்பனை செய்யப்படும் போது சுற்றி வளைப்புக்குத் தயாராக இருந்த சிறப்பு அதிரடிப் படையினர் அங்கு புகுந்தனர். வெளிநாட்டு மதுபானப் போத்தல்களை மீட்டனர்.
நேற்றுக் கைப்பற்றப்பட்ட மதுபான போத்தல்களே, இலங்கையில் கைப்பற்றப்பட்ட இரண்டாவது மிகப் பெரிய சட்ட விரோத வெளிநாட்டு மதுபான போத்தல்கள் சுற்றிவளைப்பு என்று கருதப்படுகிறது. இரு வருடங்களுக்கு முன்னர் பொரளைப் பகுதியிலிருந்து கடந்த இரு வருடங்களுக்கு முன்னர் இதைவிட அதிக பெறுமதியான வெளிநாட்டு மதுபானப் போத்தல்கள் கைப்பற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத் தக்கது.