அவுஸ்திரேலியா மற்றும் கனடா ஆகிய நாடுகளில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி பண மோசடி செய்து தலைமறைவாகயிருந்த சந்தேக நபர் ஒருவர் கைது முந்தல் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் புத்தளம், முந்தல் பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
புத்தளம், முந்தல் பிரதேசத்தில் தற்காலிகமாக தங்கியிருந்த நபரொருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் இரத்தினபுரி, கேகாலை மற்றும் நிட்டம்புவ ஆகிய பிரதேசங்களில் 43 நபர்களிடமிருந்து 190 இலட்சம் ரூபா மோசடி செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.