எங்கள் அணிக்கு வெற்றி நிச்சயம் என ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.
அதிமுக இணைப்பு குறித்தும், ஓ.பி.எஸ் அணியின் நிலைப்பாடு குறித்தும் சென்னை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்திடம் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்த அவர், நாங்கள் நடத்தும் தர்மயுத்தம் வெற்றிப்பாதையை நோக்கி செல்கிறது. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா வழியில் எங்கள் அணி செல்கிறது. எங்களுக்கு நிச்சயம், வெற்றி கிடைக்கும் என்று தெரிவித்துள்ளார்.
தற்போதைய நிலவரப்படி, எடப்பாடி பழனிசாமி ஆதரவு எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 91 ஆகவும் ஓ.பி.எஸ் ஆதரவு எம்எல்ஏ-க்கள் எண்ணிக்கை 12 ஆகவும் உள்ளது.