வெறும் 30 நிமிடத்தில் புற்றுநோயை கண்டறியலாம்
இதன் மூலம் மேற்படி நோய் நிலைமையை அதன் ஆரம்ப கட்டத்திலேயே அறிந்து, சிகிச்சையளிப்பதன் மூலம், அதன் வேறுபட்ட நோய்த்தாக்கங்களையும் கட்டுப்படுத்த முடியும் என தெருவிக்கப்படுகிறது.
இந்த தொழில்நுட்பமானது லேசர், நுண் மூலக்கூறுகளை பயன்படுத்தி புற்று நோய்க்கு முன்னான மற்றும் புற்றுநோய்க் கலங்களை கண்டறியும் தொழில்நுட்பமாகும்.
லேசர் கதிர்களைப் பயன்படுத்தி கலங்களின் தன்மையை கண்டறிவதொன்றும் புதிதல்ல. ஆனாலும் வலிமையற்ற சழிக்ஞைகளை உணர்ந்து, அவற்றை ஆராய்வது இலகுவானதல்ல.
இந்த தொழில்நுட்பத்தில் நுண் முலக்கூறுகளை இழையங்களில் பதிப்பதன் மூலம் வலிமையற்ற சழிக்ஞைகளையும் உணர முடிந்திருக்கின்றது.
இம் மூலக்கூறுகள் வலிமையற்ற சழிக்ஞைகளை, விரியலாக்குகின்றன.
இங்கு Normal, Pre-cancerous மற்றும் Cancerous போன்ற வெவ்வேறு வகை இழைங்கள் ஒளி நிறமாலையின் வெவ்வேறு பகுதிகளை காலுவது அவதானிக்கப்பட்டிருக்கின்றது.
தற்போது மேற்படி ஆய்வுக் குழுவானது புற்றுநோயை இலகுவில் கண்டறியும் கைக் கருவியை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.