வெறுப்பு அரசியலுக்கு எதிராக போராடும் சக்திகளுடன் நீங்களும் இணையுங்கள் என காங். தலைவர் ராகுல் பேசினார்.
காங். தலைவராக பொறுப்பேற்ற ராகுல் முதல் முறையாக தனது வெளிநாட்டு பயணமாக பக்ரைன் சென்றுள்ளார்.அங்கு அந்நாட்டு பட்டத்து இளவரசர் ஷேக் காலித் பின் ஹமத்தை சந்தித்தார்.
பின்னர் அங்கு வாழும் இந்தியர்கள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் பேசியது, இந்தியாவில் அசாதாரண சூழல் நிலவுகிறது; .உங்களது நாட்டில் மிகவும் தீவிரமான பிரச்சனைகள் உள்ளன அதேநேரத்தில் இந்த பிரச்னைகளுக்க தீர்வு காண நீங்களும் பங்கு வகிக்கிறீர்கள் என்பதையும் குறிப்பிடுகிறேன்.
நான் ஒரு பாலம்
வெறுப்பு அரசியலுக்க எதிராக போராடும் சக்திகளுடன் நீங்களும் இணையுங்கள். நீங்கள் உலகில் எங்கு இருந்தாலும் உங்களுக்கும், இந்தியாவிற்கும் நான் பாலமாக இருக்கவே இங்கு வந்துள்ளேன். கடந்த 8 ஆண்டுகளில் முதல் முறையாக வேலைவாய்ப்பு என்பது மிகவும் குறைவானதாக இருக்கிறது., வறுமை ஒழிப்பு, வேலை வாய்ப்புகளை உருவாக்குதல், உலகத் தரம் வாய்ந்த கல்வியை வழங்குதலில் கவனம் செலுத்தாமல் வெறுப்பு அரசியலை அரசியலையும் பிரிவினையையும் அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்.