வெயாங்கொட, ஹிந்தெனிய பிரதேசத்தின் பட்டியகொட புகையிரத கடவையில் மோட்டார் வாகனம் ஒன்று விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த மோட்டார் வாகனம் பட்டியகொட புகையிரத கடவையினூடாக வெயாங்கொட பகுதியை நோக்கிச் செல்ல முற்பட்ட வேளையில் எரிபொருள் கொண்டுசெல்லும் புகையிரதத்துடன் மோதியதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் படுகாயமடைந்த நால்வரில் ஒருவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் காயமடைந்த மூவர் வத்துபிடிவல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் இருவர் உயிரிழந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
குறித்த விபத்தில் ஒரு ஆண் மற்றும் இரு பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெயாங்கொட பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.