வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலய விக்கிரகங்களை மீண்டும் அதே இடத்தில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
வவுனியா நீதிமன்றம் இன்று (27.04.2023) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
இந்நிலையில் எடுத்துச்செல்லப்பட்ட விக்கிரகங்களையும் ஆலய பரிபாலனசபையிடம் உடனடியாக ஒப்படைக்குமாறு பொலிஸாருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வவுனியா – நெடுங்கேணியில் அமைந்துள்ள வெடுக்குநாறி மலையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த ஆதிலிங்கம் கழற்றி வீசப்பட்டுள்ளதுடன் ஏனைய விக்கிரகங்களும் மாயமாகியுள்ளமை பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருந்தது .
இந்த ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு இடையூறாக தொல்பொருள் திணைக்களம் மற்றும் பொலிஸ் என்பன நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த நிலையில், நீண்ட காலமாக பூஜைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தது.
வவுனியா – நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் நீண்ட காலத்திற்கு பிறகு பூஜை வழிபாடுகள் நேற்று (26.04.2023) ஆரம்பமாகி உள்ளன.
பின்னர், கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஆலயத்தில் இருந்த விக்கிரகங்கள் இனம் தெரியாத நபர்களினால் உடைக்கப்பட்டிருந்ததாகவும் தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனையடுத்து வெடுக்குநாறி பிரதேசத்திலே வணக்கங்களை நடத்துவதற்கு பக்தர்கள் செல்வதை எந்த அரச அதிகாரியும் தடுக்காமலிருக்க வவுனியா நீதவான் நீதிமன்றத்தால் உத்தரவிடப்பட்டிடுந்தமையும் குறிப்பிடத்தக்கது.