கேழ்வரகில் முருங்கை கீரை சேர்த்து அடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று காய்கறிகளை சேர்த்து சத்தான அடை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
கேழ்வரகு மாவு (கம்பு மாவு, சோள மாவு, கோதுமை மாவு, சத்துமாவு போன்றவற்றில் தயாரிக்கலாம்) – 150 கிராம்.
உளுந்து – 50 கிராம்,
கேரட், தக்காளி, வெங்காயம் – தலா ஒன்று,
முட்டைக்கோஸ் – 25 கிராம்,
இஞ்சி, பூண்டு – சிறிதளவு
கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை – சிறிதளவு
குடைமிளகாய் – ஒன்று
உப்பு- சிறிதளவு
செய்முறை:
கொத்தமல்லி, அனைத்து காய்கறிகளையும் தேங்காய்த் துருவல்போல் சிறிதாக நறுக்கவும்.
கேழ்வரகு மாவை வடை மாவுப் பதத்தில் நீரில் கலக்கி, துருவிய காய்கறிகள், உப்பு சேர்த்து கலக்கவும்.
இதனுடன் சிறிதளவு பாசிப்பருப்பு அல்லது உளுத்தம் பருப்பை அரைத்தும் சேர்க்கலாம்.
கலக்கிய மாவை, தோசைக்கல்லில் ஊற்றி இருபுறமும் வேக வைத்து பொன்முறுவலாக எடுத்துப் பரிமாறவும்.
சூப்பரான சத்தான வெஜிடபிள் கேழ்வரகு மாவு அடை ரெடி.
குறிப்பு: ஏதாவது ஒரு காய்கறி அல்லது ஏதாவது ஒரு கீரை என கலந்தும் அடை வகைகளைச் செய்யலாம். வழக்கமான சைடு-டிஷ் சேர்த்துச் சாப்பிடலாம். தனியாகச் சாப்பிட்டாலும் அருமையான சுவை கிடைக்கும்.
http://Facebook page / easy 24 news
http://Facebook page / easy 24 news