வெசாக்கை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் ஒரு வாரத்துக்கு மதுபான விற்பனை நிலையங் களை மூடுவதற்கு இலங்கை மது வரித்திணைக்களம் தீர்மானித்துள்ளது.
இலங்கை மது வரித்திணைக்கள ஜெனரல் ஆர். சேமசிங்கவின் ஆலோசனையின் கீழ் இந்தச் செயற்திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.
மது வரித்திணைக்களத்தால் எடுக்கப்பட்டுள்ள இந்தத் தீர்மானத்துக்கு எதிராகச் செயற்படுபவர்களுக்கு கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அபராதமும் விதிக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மாதம் 27 ஆம் திகதி முதல் மே மாதம் 3 ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரம் அற்ற மது விற்பனை நிலையங்களை மூடுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதற்காக மது வரித்திணைக்களத்தின் சட்ட செயற்படுத்தல் பிரிவின் கீழ் சிறப்பு அதிகாரிகள் கொண்ட குழுவும் நியமிக்கப்படவுள்ளன.
இந்த நடைமுறைகளை மீறி செயற்படுபவர்கள் தொடர்பில் பொது மக்கள் மது வரித்திணைக்களத்துக்கு அறியத்தருவதன் மூலம் இதனை சிறப்பாக முன்னெடுக்க பொது மக்களின் ஒத்துழைப்பும் கோரப்பட்டுள்ளன.
சட்டவிரோதமாக மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் தகவல்களை தெரிவிப்பதற்காக 24 மணித்தியால விசேட சேவை செயற்படுத்தப்படவுள்ளது.
சட்ட விரோத மது பான விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்பாக 011-2045077 என்ற தொலைபேசி இலக்கத்தின் மூலமும், 011-2877882 என்ற தொலைநகல் இலக்கத்தின் மூலமும் அறியத்தர முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.