வெங்காயத்தினால் கருப்பு பூஞ்சை ஏற்படும் என்று சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவதற்கு மருத்துவ நிபுணர்கள் மறுப்பு தெரிவித்துள்ளனர்.
நாம் உணவில் பயன்படுத்தும் வெங்காயத்தின் மேல் பகுதியில் காணப்படும் கருப்பு பூஞ்சை மற்றும் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியில் இருக்கும் ரப்பரில் காணப்படும் கருப்பு பூஞ்சை ஆகியவை மூலம் கரும்பூஞ்சை வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வேகமாக பரவி வருகின்றன.
இதுதொடர்பாக பேசி மருத்துவ நிபுணர்கள், அந்த செய்திகள் அனைத்தும் போலியானது என்றும் அதனை யாரும் நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர். வெங்காயத்தின் மேல் காணப்படும் பூஞ்சைகள் பூமியின் கீழ் உள்ள பூஞ்சைகள் என்றும் கருப்பு பூஞ்சையை உருவாக்கும் வைரஸ்கள் வேறானது என்றும் தெரிவித்துள்ளனர்.