வீதியை கடக்கையில் பாடசாலை சிறுமிக்கு ஏற்பட்ட திகிலூட்டும் சாலை சம்பவம்!
கனடா- ரொறொன்ரோ பகுதியை சேர்ந்த சிறுமி ஒருத்தி பாடசாலை பேரூந்தை கடந்து செல்கையில் உடல் ரீதியாக ஆபத்தின்றி தப்பியபோதும் திகிலூட்டும் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட சம்பத்தை தொடர்ந்து ரொறொன்ரோ தாய் ஒருவர், பாடசாலை பேரூந்துகள் மற்றும் சிறுவர்கள்ள விளையாடும் பாடசாலை சுற்று வட்டாரங்களில் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு வாகன ஓட்டுநர்களையும் வலியுறுத்துகின்றார்.
பிக்கரிங். ஒன்ராறியோவில், கடந்த செப்டம்பர் 29-ல் 10வயது றெபேக்கா ஹில்லெர் தனது சக மாணவர்களுடன் பாடசாலை பேரூந்திலிருந்து குடியிருப்பு பகுதியொன்றில் இறங்கியுள்ளாள்.
அண்மையில் இருந்த வீடொன்றில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்பு கமரா வீடியோவில் பிள்ளைகள் பலர் பேரூந்திலிருந்து இறங்கி வீதியை கடந்து சென்றனர்.
ஹில்லெர் வீதியின் அரைபகுதியை கடந்தசமயம் கார் ஒன்று அவளிற்கு மிக நெருக்கத்தில் மயிரிழையில்;அவளை தவறி அவளது தோள் பையை தொட்டவாறு வந்துள்ளது. இக்காட்சி வீடியோவில் பதிவாகியுள்ளது.
றெபேக்காவின் தாயார் மெலிஸ்சா தனது மகள் இச்சம்பவத்தால் பயந்துள்ளதாக சிரிவி செய்தியாளரிடம் தெரிவித்தார். அவளுடன் கதைக்க முடியாதவாறு அலறியும் அழுத வண்ணமும்இருந்தாள் என தெரிவித்தார்.
இச்சமயத்தில் அயலவர் வீடியோவையும் காட்டியுள்ளனர். ஒருவராலும் நம்ப முடியவில்லை.
ஒரு சிறு நொடியில் உங்கள் பிள்ளை காயப்பட்டு அல்லது கொல்லப்படுவதை ஒருவரும் விரும்பமாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.