பொலிஸாரின் வீதிச் சோதனை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அண்மைய நாள்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
சில மாதங்களுக்கு முன்னர் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடந்ததை அடுத்து பொலிஸாரின் வீதிச் சோதனைகள் இறுக்கப்பட்டிருந்தன. சந்தேகத்தின் பேரில் பலர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். பொலிஸாரின் தீவிர நடவடிக்கைகளை அடுத்து வாள்வெட்டுச் சம்பவங்கள் குறைந்திருந்தன.
சில தினங்களுக்கு முன்னர் ஆனைக்கோட்டையில் நடந்த வாள்வெட்டில் இருவர் படுகாயமடைந்தனர். இந்தச் சம்பவத்தை அடுத்து பொலிஸாரின் வீதிச் சோதனைகளை மீளவும் இறுக்கமாக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.