50 மாதிரி கிராமங்கள் ஊடாக 1200 வீடுகள் அமைக்கும் நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான இரு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்திய மற்றும் இலங்கை கைச்சாத்திட்டுள்ளன.
இந்திய அரசினால் 600 மில்லியன் ரூபாய் மானியமாக வழங்கவுள்ள இத்திட்டத்தின் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் இந்திய உயர்ஸ்தானிகர் தரஞ்சித் சிங் சந்து மற்றும் வீடமைப்புத்துறை அமைச்சின் செயலாளர் டப்ளியூ.கே.கே. அத்துகோரல ஆகியோர் நேற்று கைச்சாத்திட்டுள்ளனர்.
மேலும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக பிரதேசத்திலும் இந்திய அரசாங்கத்தின் மானியங்களுடன் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.