நடிகர் ரஜினி மற்றும் நடிகை நயன் தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் தர்பார். இந்தப் படத்தை இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வருகிறார். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் மூன்றாம் கட்ட படபிடிப்பு மும்பையில் வேகமாக நடந்து வருகிறது.
படத்தை வேகமாக முடிந்துவிட்டு, புரமோஷன் வேலைகளில் இறங்க படக் குழு தீவிரமாக இருக்கிறது. வரும் 2020, ஜனவரி, பொங்கல் நாளில் படத்தை ரிலீஸ் செய்யவும் படக் குழு திட்டமிட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்தப் படத்தில் பணியாற்றும் ஒரு நபர் குறித்தத் தகவல் தற்போது வெளியாகி இருக்கிறது. நடிகர் விஷ்ணு விஷாலில் தம்பி ருத்ரா. அவர், இந்தப் படத்தின் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குநராக பணியாற்றி வருகிறர். இந்தத் தகவல் தற்போது வெளியாகி, பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.