விஷால் என்னை கொல்லப்பார்க்கிறார்- கிளம்பிய குற்றச்சாட்டு
நடிகர் சங்கம் தற்போது தான் எந்த ஒரு பிரச்சனையும் இன்றி செல்கின்றது. ஆனால், நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டியில் ஊழல் நடந்துவிட்டதாக வாராகி என்பவர் புகார் கொடுத்துள்ளார்.
இவர் கூறுகையில் ‘நடந்து முடிந்த கிரிக்கெட் போட்டியில் பல கோடி ஊழல் நடந்துள்ளது, இவை எனக்கு தெரியும், இதுக்குறித்து அவர்களிடம் கேட்டேன்.
என்னை நேரில் அழைத்தார்கள், அப்போது விஷாலின் பேச்சு மிக மோசமானது, பூச்சி முருகனின் ஆட்கள் என்னை தாக்க வந்தார்கள்.
அங்கிருந்து தப்பித்து வந்ததே போதும் என்றாகிவிட்டது’ என கூறியுள்ளார். இதுக்குறித்து நடிகர் சங்கமோ ‘முதலில் ஆதாரத்தை காட்ட சொல்லுங்கள், குழப்பத்தை உண்டாக்க இப்படியெல்லாம் செய்கிறார்’ என கூறிவிட்டது.