பிரபல நட்சத்திர தம்பதிகள் நாகசைதன்யா மற்றும் சமந்தா ஆகிய இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்துவிட்டனர் என்ற செய்தி அனைவரும் அறிந்ததே. ஆனால் இவர்களது பிரிவுக்கு என்ன காரணம் என இரு தரப்பில் இருந்தும் இன்னும் விளக்கம் அளிக்கப்படவில்லை
இந்நிலையில் பாலிவுட்டின் சூப்பர் ஹிட்டான ’காபி வித் கரண்’ என்ற நிகழ்ச்சியின் ஏழாவது சீசனின் போது சமந்தாவிடம் விவாகரத்து குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் முதல் முறையாக தன் மனம் திறந்து பதில் அளித்துள்ளார்.

உங்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று காபி வித் கரண் நிகழ்ச்சியில் கரண்ஜோகர் கேட்டபோது அதற்கு சமந்தா, ‘நம்முடைய மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கைக்கு நாம் தான் முழுக்க முழுக்க காரணம் என்றும், நம்முடைய எதிர்பார்ப்பு பூர்த்தியாகாத போது வாழ்க்கை கடினமானதாக மாறுகிறது’ என்று கூறியுள்ளார்

நமக்கு அதிகமான எதிர்பார்ப்பு வாழ்க்கையில் இருந்தால், அந்த எதிர்பார்ப்பு பூர்த்தி அடையவில்லை என்றால் நம்முடைய வாழ்க்கை கேஜிஎப் வாழ்க்கை போன்று கடினமானதாக மாறிவிடும் அவர் கூறியுள்ளார். இதிலிருந்து சமந்தாவின் விவாகரத்துக்கு அவரது எதிர்பார்ப்பு திருமண வாழ்க்கையில் பூர்த்தியாகவில்லை என தெரிகிறது.
