விலா எலும்பை உடைக்க முயன்ற பந்துவீச்சாளர்: சச்சின் என்ன செய்தார் தெரியுமா?
ஐடிபிஐ பெடரல் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் மாரத்தான் போட்டியை அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் நடத்துகிறது.
இதற்காக மும்பையில் நடந்த அறிமுக விழாவில் கலந்து கொண்ட சச்சின் டெண்டுல்கர் பேசுகையில், விளையாட்டில் ஒரு போதும் பலவீனங்களை அம்பலப்படுத்த முடியாது.
ஒரு முறை போட்டி ஒன்றில் வேகப்பந்து வீச்சாளர் வீசிய பந்து என்னுடைய விலா எலும்பை தாக்கியது. அப்போது வலியுடன் இருந்த நான் அவரை முறைக்க, அவரும் என்னை முறைத்து பார்த்தார்.
உடற்பயிற்சி தான் எனது ஓட்டங்கள் எடுக்கும் வேகத்தை அதிகரித்தது. வெற்றிகளை பொறுத்தமட்டில் சவால்களிலும், கஷ்டங்களிலுமே உள்ளது.
தினசரி 12 மணி நேரம் பயிற்சி மேற்கொண்டேன். களத்தடுப்பு சித்ரவதை போல் இருந்தாலும் அதையும் மகிழ்ச்சியுடன் செய்தேன். மாரத்தான் போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு வாழ்த்துக்கள் என்று கூறியுள்ளார்.