விரைவில் இந்தியாவை பழிதீர்ப்போம்! கொதித்த பிரபல பாகிஸ்தான் வீரர்!
இன்ஜமம் உல் ஹக் அளித்துள்ள பேட்டியில், பாகிஸ்தானுடன் கடந்த 2007ம் ஆண்டு முதல் கிரிக்கெட் போட்டி தொடர்களில் பங்கேற்பதை இந்தியா தவிர்த்து வருகின்றது. இதுமிகவும் வருத்தமான விஷயம்.
பாகிஸ்தான் அணி சொந்த மண்ணில் விளையாடாமலேயே டெஸ்ட் போட்டியில் முதல் இடத்தை பிடித்தது.
ஆனால் இந்திய அணியோ வெளிநாடுகளில் பங்கேற்ற போட்டிகளில் பாகிஸ்தான் அணி பெற்ற வெற்றியை விட குறைவான வெற்றியையே பெற்றது. அதுமட்டுமல்லாமல் அடுத்த 13 டெஸ்ட் போட்டி இந்திய அணி அதன் சொந்த மண்ணில் விளையாடவுள்ளது.
ஆனால் பாகிஸ்தான் அணியோ கடந்த 2009ம் ஆண்டு முதல் சொந்த மண்ணில் போட்டிகளில் விளையாடியது இல்லை. இருப்பினும் நாங்கள் முதலிடத்தை பிடித்தோம், ஆனால் அதை இந்தியா பறித்து விட்டது.
எங்கள் அணியில் மிகத் திறமையான வீரர்கள் உள்ளனர். எங்களுக்கு ஒரு நாள் தொடர், டி20 தொடர்களில் விளையாடும் அளவிற்கான திறமையான இளம் வீரர்கள் கிடைத்துள்ளனர்.
விரைவில் இந்தியாவிடம் உள்ள நம்பர் 1 இடத்தை நாங்கள் தட்டி பறிப்போம் என இன்ஜமம் உல் ஹக் தெரிவித்துள்ளார்.