எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு முதல் சாதாரண தரப் பரீட்சைகள் தொடர்பான தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை செய்யப்பட்டுள்ளது.
முறைப்பாடு செய்ய முடியும்
கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைகள் எதிர்வரும் 29ஆம் திகதி முதல் ஆரம்பமாகவுள்ள நிலையில் இவ்வாறு தனியார் வகுப்புக்களை நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
குறித்த விதிமுறைகளை மீறும் வகையில் செயற்பட்டால் அது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் அல்லது பரீட்சை திணைக்களத்திற்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.