விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில் விரதம் என்பது, அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது. விரதம் இருப்பதனால் உடல் மற்றும் மன நிலையில் அமைதி மற்றும் புத்துணர்ச்சி ஏற்படுகிறது. உடலில் உள்ள செல்கள் புத்துயிர் பெற்று, நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மருத்துவ ரீதியாக நிரூபிக்கப்பட்டுள்ளது.
ஒரு வேளை மட்டும் உணவு அருந்துவது, நாள் முழுவதும் எதுவும் சாப்பிடாமல் இருப்பது, அசைவ உணவுகளை தவிர்த்து சைவ உணவுகளை மட்டும் உண்ணுவது, நீர், ஜூஸ், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பது என பல முறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன. எந்த முறையில் விரதம் இருந்தாலும் பலன் கிடைப்பது உறுதி என்று ஆன்மிக சான்றோர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
பொதுவாக, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வாரம் ஒரு முறை விரதமிருப்பது சரியானது. விரதத்துக்கு 2 நாள்களுக்கு முன்பிருந்தே காரம், குறைவான பருப்பு சாதம் மாதிரி நன்கு வெந்த உணவுகளையும், ரசம் சாதம், மோர் மற்றும் பழங்களையும் உண்பது ஆன்மிக வாழ்வுக்கு ஏற்றது.
குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பணி பெண்கள், கடுமையான வேலை செய்பவர்கள், அடிக்கடி வெளியூர் செல்பவர்கள், நோயாளிகள், தொடர்ந்து மருந்து உட்கொண்டு வருபவர்கள் ஆகியோர் விரதம் இருப்பதை தவிர்க்க வேண்டும் என்பது முக்கியமான விதியாகும்.
சந்திராம்ச விரதம் என்ற ஒரு வகை விரத முறையும் கடைப் பிடிக்கப்பட்டு வருகிறது. அதாவது, சந்திரனின் பிறை வளர்வதற்கு ஏற்ப உணவின் அளவை முறைப்படுத்தி விரதம் இருப்பதாகும். இந்த முறையின்படி அமாவாசை அன்று எதுவும் சாப்பிடாமல் விரதம் இருக்க வேண்டும். அமாவாசைக்கு அடுத்த நாளில் இருந்து ஒவ்வொரு கவளமாக படிப்படியாக உணவின் அளவு கூட்டப்பட்டு, பவுர்ணமியில் முழு உணவாக உண்பது முறை. பின்னர், படிப்படியாக குறைத்துக்கொண்டே வந்து அமாவாசையன்று விரதத்தில் முடிவு பெறும்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]