விருது விழாக்களை தாக்கி பேசிய ஹிப்ஹாப் தமிழா ஆதி (வீடியோ)
பல்வேறு விருது விழாக்களை தாக்கி பேசியுள்ளார் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழா.
காளைகளை பற்றிய ஒரு பாடலை வெளியிட்ட ஹிப்ஹாப் தமிழா ஆதிக்கு ஜல்லிக்கட்டு ஆதரவாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
சென்ற வாரம் ‘காங்கேயம் காளைகள்’ பங்கேற்கும் விழா ஒன்றிற்கு அவரை அழைத்திருந்தனர். அங்கு பேசிய அவர் இது போன்ற விழாக்களில் கலந்துகொள்வதை பெருமையாக நினைப்பதாக தெரிவித்தார்.
மேலும் சினிமா விருது நிகழ்ச்சிகள் முன்புபோல் ஜெயிப்பவர்களுக்கு விருது என்பது, விழாவிற்கு வருபவர்களுக்கு விருது என மாறிவிட்டது. அதனால் அந்த விழாக்களில் பெரும்பாலும் கலந்துகொள்வதில்லை எனவும் கூறியுள்ளார்.
அவர் பேசிய வீடியோ.. முழுமையாக இதோ..