விராட் கோஹ்லியின் வித்தியாசமான பயிற்சி: அலறி அடித்து ஓடிய வீரர்
இந்திய அணியின் தற்போது அசைக்க முடியாத சக்தியாக விளங்குபவர் விராட் கோஹ்லி. இவரின் விடா முயற்சியால் தான் தற்போது புகழின் உச்சிக்கு சென்றுள்ளார்.
இந்திய அணிக்கு ஆரம்பத்தில் வந்த போது 5 வது, 6வது வீரராக களமிறங்கிய இவர், தற்போது துவக்க ஆட்டக்காரராக களமிறங்கி விளையாடும் அளவிற்கு திறைமையை தன்னுள் வளர்த்துள்ளார். இந்திய அணியின் அடுத்த சச்சின் டெண்டுல்கர் எனவும் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தற்போது வரை பேட்டிங்கில் அசத்தி வரும் இவர், அதற்கான பயிற்சியை எவ்வாறு செய்கிறார் என்பது பற்றிய வீடியோ இணையத்தில் உள்ளது.
அதில் ஸ்போர்ட்ஸ் வீரர் ஒருவர் டயரை உருட்டி விடுகிறார். கோஹ்லி தான் வைத்திருக்கு பந்தை தனது மட்டையால் டயருக்கு உள்ளே அடிக்கிறார். ஒரு தடவை அடிக்கிறார் அது சரியாக சென்றது, இரண்டாவது தடவை அடிக்கிறார் அதுவும் சரியாக சென்றது, அதற்கு மேற்பட்ட தடவை அடிக்கும் போது குறி தவறி டயர் பிடித்தவர் மீது பந்து படுகிறது.
அடுத்த தடவை விராட் கோஹ்லி பந்தை அடிப்பதற்குள் அந்த வீரர் டயரை கீழே போட்டு ஓடிய சம்பவம் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.